evening snacks for kids மொறு மொறு ஈவினிங் ஸ்னாக்ஸ் -veg nugget balls
பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு பிடித்தமான மொறு மொறு வெஜ் கிறிஸ்பி நகெட் பால்ஸ்
செய்ய தேவையான பொருட்கள் :
- வேக வைத்த உருளை கிழங்கு - 1
- பன்னீர் - 100 gm
- வெங்காயம் -2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் -1
- கறிவேற்பிலை - சிறிதளவு
- பிரட் துண்டுகள் - 3 (அ ) 4
- இஞ்சி பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- மிளகாய் தூள் - சிறிதளவு
- சாட் மசாலா - சிறிதளவு
- மைதா மாவு - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
- உப்பு -தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளை கிழங்கை வேக வைத்து துருவி எடுத்து கொள்ளவும் .
பன்னீரை சூடு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து வடி கட்டி எடுத்து கொள்ளவும். ஏனெனில் பன்னீரின் வாடை வராமல் இருப்பதற்காக பன்னீரை வடிகட்டி அதையும் பிசைந்து வைத்து கொள்ளவும் . இப்போது கிழங்கு , பன்னீர், வெங்காயம்,பச்சை மிளகாய் , கறிவேற்பிலை மஞ்சள்தூள், மிளகாய் தூள் ,சாட் மசாலா,இஞ்சி பூண்டு விழுது ,உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் . தண்ணீர் ஊற்றாமல் பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் . சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் . இந்த உருண்டைகளை ஒன்றிலிருந்து அரை மணி நேரம் பிரிட்ஜ்ல் வைத்து எடுத்து கொள்ளவும் .இப்படி வைப்பதால் உருண்டைகளை பொரிக்கும் போது உதிராமல் இருக்கும் . பிறகு இன்னொரு பாத்திரத்தில் மைதாவை எடுத்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும் . உருண்டைகளை மைதா கலவையில் முக்கி பிரட் தூளால் உருட்டி எடுத்து 2 நிமிடம் கழித்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் .
இப்போது தயார் அனைவரும் விரும்பும் மொறு மொறு ஈவினிங் ஸ்னாக்ஸ்.
இத்துடன் டொமட்டோ சாஸ் சேர்த்து பரிமாறலாம்..... சுவையாக இருக்கும் .
Comments
Post a Comment