coconut milk rice recipe in tamil / thengai pal satham in tamil /தேங்காய் பால் சாதம்
செய்ய தேவையான பொருட்கள் :
- அரிசி - 1 kg
- தேங்காய் எண்ணெய் - 100 ml
- நெய் - 100 ml
- பட்டை,ஏலம் ,கிராம்பு,சோம்பு,காசா,அண்ணாச்சி பூ - தாளிக்க தேவையான அளவு
- வெங்காயம் -100 kg
- பூண்டு -100 kg
- இஞ்சி - 50 kg
- பச்சை மிளகாய் - 10 எண்ணிக்கை
- தேங்காய் பால் - 2 கப்
- கறிவேற்பிலை - ஒரு கைப்பிடி
- கொத்தமல்லி -ஒரு கைப்பிடி
- புதினா -ஒரு கைப்பிடி
- கரம்மசாலா போடி - 1 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் தேங்காய் எண்ணெய் , நெய் ஊற்றி காய்ந்த உடன் பட்டை,ஏலம் ,கிராம்பு,சோம்பு,காசா,அண்ணாச்சி பூ ஆகியவற்றை நன்கு பொறியவிடவும் .
பிறகு கறிவேற்பிலை ,புதினா,கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் கரம்மசாலா சேர்க்கவும் பிறகு இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த கலவையை கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.நன்கு வதக்கிய உடன் தேங்காய் பால் சேர்க்கவும் .பிறகு தண்ணீர் சேர்த்து ( தண்ணீர் அரிசியை விட 2 மடங்காக இருக்க வேண்டும் ) அரிசியையும் சேர்த்து வேகா விடவும். தண்ணீர் வற்றிய உடன் சாதம் வெந்தவுடன் உப்பு சேர்த்து கிளறவும். உப்பு முதலிலேயே சேர்க்க கூடாது . பிறகு மல்லி, புதினா தூவி இறக்கவும்.
இப்பொது சுவையான தேங்காய் பால் சாதம் ரெடி .
உருளை வறுவல் இதற்கு பொருத்தமானது .
உங்கள் குடும்பத்தினருக்கு பரிமாறி மகிழவும்.
Comments
Post a Comment