MUSLIM STYLE CHICKEN BIRYANI IN TAMIL / சிக்கன் பிரியாணி
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள:
- எண்ணெய் - 100 ml
- சீராக சம்பா அரிசி - 1 கிலோ
- பிரியாணி இலை , பட்டை,கிராம்பு,சோம்பு,ஏலம் - தாளிப்பதற்கு ஏற்ப
- பெரிய வெங்காயம் -2
- பச்சை மிளகாய் -4
- இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி
- தக்காளி -2
- புதினா - 1 கைப்பிடி அளவு
- மல்லி இலை -1 கைப்பிடி அளவு
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- மல்லி தூள் - 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- தயிர் - 1 கப்
- எலுமிச்சை பழச்சாறு - 3 தேக்கரண்டி
- சிக்கன் - 1 கிலோ
- கரம் மசாலா - அரை தேக்கரண்டி
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , எண்ணெய் காய்ந்த உடன் பிரியாணி இலை , பட்டை , கிராம்பு, ஏலம் , சோம்பு போட்டு நன்கு பொறிந்த உடன் , நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு 4 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு தக்காளி , உப்பு, புதினா, மல்லி சேர்த்து வதக்கவும்.பிறகு மஞ்சள் தூள்,மல்லி தூள்,மிளகாய் தூள் , தயிர், எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள சிக்கனையும் சேர்த்து ஒரு தம்ளர் நீரையும் கரம் மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடத்திற்கு மூடி விடவும்.
1 கிலோ சீராக சம்பா அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். பிறகு வேறொரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து அத்துடன் ஊற வாய்த்த அரிசியையும் உப்பையும் சேர்த்து வேக வைக்கவும். பிறகு இவற்றுடன் 2 கிராம்பு, 1 பிரியாணி இலை, 1 பட்டை சேர்த்து நன்கு வேக விடவும்.
இப்பொழுது அரிசியை அரை வேக்காடாக வேக விடவும்.
சிக்கனும் நன்றாக வெந்தவுடன் அரிசையும் சிக்கனையும் சேர்க்கவும் .
இவற்றை நன்றாக கிளறி 20 நிமிடம் தம் போடவும் . 20 நிமிடம் கழித்து நன்றாக கிளற மல்லி இலை தூவி அனைவர்க்கும் பரிமாறவும்.
சுவையான பாய் வீடு பிரியாணி ரெடி .
Comments
Post a Comment