Pav Bhaji Recipe in Tamil | Pav Bhaji Masala in Tamil | How to make Pav Bhaji in Tamil


பாவ் பஜ்ஜி மசாலா செய்ய தேவையான பொருட்கள் :

கேரட்                             -2
பீன்ஸ்                           -10 
காலிஃளார்                 - பாதி அளவு 
உருளை கிழங்கு    -2
பச்சை பட்டாணி     - அரை கப் 
வெண்ணைய்          -3 தேக்கரண்டி 
சீரகம்                             - அரை தேக்கரண்டி 
பெரிய வெங்காயம்- 1
தக்காளி                        - 4
குடை மிளகாய்         -1
இஞ்சி பூண்டு விழுது -அரை தேக்கரண்டி 
கொத்த மல்லி               - சிறிதளவு 
மஞ்சள்                              - அரை தேக்கரண்டி
சீராகத்  தூள்                  -அரை தேக்கரண்டி
மல்லித் தூள்                 -1 தேக்கரண்டி 
கரம் மசாலா                  - 1 தேக்கரண்டி 
மிளகாய் தூள்               -கரத்திற்கேற்ப 
எலுமிச்சை பழச்சாறு   -சிறிதளவு 
தண்ணீர்                           -தேவையான அளவு  
உப்பு                                    -தேவையான அளவு  

செய்முறை:

முதலில் கேரட் , பீன்ஸ், காலிஃளார், உருளை கிழங்கு , பட்டாணி ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து  நன்றாக வேக வைக்கவும்.  வெந்தவுடன்  அவற்றை அந்த நீருடன் சேர்த்தே  நன்கு மசித்து கொள்ளவும். 
பிறகு ஒரு கடாயில் வெண்ணெய்  ஊற்றி அது காய்ந்ததும்  சீரகம்,  நறுக்கிய வெங்காயம் சேர்த்து கிளறவும்.வெங்காயம் 2 நிமிடம்  வதங்கிய உடன் , இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் தூள்,சீராக தூள், மல்லி தூள், கரம் மசாலா,மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.மசாலாவின் பச்சை வாசனை போன உடன் தக்காளி சேர்க்கவும். வெங்காயம் தக்காளி நன்கு வெந்தவுடன் அவற்றுடன் குடை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வேக விடவும்.  பிறகு நாம் மசித்து  வைத்துள்ள காய்கறிகளை வேக வைத்த  நீருடன் மசாலாவில்  சேர்க்கவும் . இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து  மசாலா   கெட்டியாக  வரும் வரை வேக  வைத்து  இறக்கவும். பிறகு மசாலாவை  நன்கு மசித்து  கொத்த மல்லி ,எலுமிச்சை சாறு ,  நறுக்கிய வெங்காயம் , ஒரு சிறிய துண்டு வெண்ணெய் தூவி பறிமாறவும்.
சுவையான பாவ் பஜ்ஜி மசாலா ரெடி.
இதனை பண்ணுடன்  சேர்த்து பரிமாறவும்.



Comments

Popular posts from this blog

MUSLIM STYLE CHICKEN BIRYANI IN TAMIL / சிக்கன் பிரியாணி

coconut milk rice recipe in tamil / thengai pal satham in tamil /தேங்காய் பால் சாதம்