Bread Halwa - நினைத்தாலே இனிக்கும் சுவையான பிரட் அல்வா

சுவையான பிரட்  அல்வா செய்ய தேவையான பொருட்கள் :

  • பிரட்                            - 10 
  • பாதாம்                        - 10
  • முந்திரி                       -10
  • ஏலம்                            - 2
  • சர்க்கரை                     - தேவையான அளவு 
  • நெய்                              - 100 ml 
  • நல்ல எண்ணெய்     - பொறிக்க தேவையான அளவு 
  • பால்                                -200 ml 

செய்முறை:

முதலில் பிரட் துண்டுகளை  எடுத்து அதன் ஓரங்களை நீக்கி  4 துண்டுகளாக  வெட்டி கொள்ளவும். அவற்றை காய வாய்த்த எண்ணெய்யில் போட்டு  பொன்னிறமாக பொரித்து கொள்ளவும்.இதனை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்  . பிறகு பாலை   நன்கு காய்ச்சவும் . பாலுடன் சர்க்கரையும் சேர்த்து கொதிக்க விடவும். மீண்டும் ஒரு கடாயில்  நெய் ஊற்றி பாதாம் , முந்திரி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அதே  கடாயில் பொறித்த பிரட் துண்டுகளை போடவும். காய்ச்சிய பாலை பிரட் துண்டுகளில் ஊற்றவும் .
இரண்டையும் சேர்த்து நன்றாக கிளறவும் . ஏலக்காய் தூளையும் இத்துடன் சேர்க்கவும். பிரட்டையும்  பாலையும் நன்றாக மசித்து விடவும் மீண்டும் நெய் ஊற்றி மனம் வரும் வரை நன்றாக  கிண்டவும். அல்வா பதத்திற்கு வந்த உடன் பொரித்து வைத்துள்ள பாதாம் , முந்திரியை போட்டு இறக்கவும் 
இப்போது ரெடி பிரட் அல்வா .
அனைவர்க்கும் பரிமாறி  மகிழவும் .

Comments

Popular posts from this blog

MUSLIM STYLE CHICKEN BIRYANI IN TAMIL / சிக்கன் பிரியாணி

coconut milk rice recipe in tamil / thengai pal satham in tamil /தேங்காய் பால் சாதம்

Pav Bhaji Recipe in Tamil | Pav Bhaji Masala in Tamil | How to make Pav Bhaji in Tamil