kovil puliyothara recipe in tamil / puliyotharai recipe in tamil
1 kg புளியோதரை சாதத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விவரங்கள் ............
தேவையான பொருட்கள் :
வறுப்பதற்கு தேவையானவை :
- கடுகு - 2 தேக்கரண்டி
- வெந்தயம் -2 தேக்கரண்டி
- சமையல் கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
- உளுந்து -2 தேக்கரண்டி
- காய்ந்த மல்லி - 1 கைப்பிடி அளவு
- பச்சரிசி - 1 கைபிடி அளவு
- மிளகாய் வற்றல் - காரத்திற்கு ஏற்ப (eg : 10 எண்ணிகை )
தாளிப்பதற்கு தேவையானவை :
- நல்ல எண்ணெய் - 250 ml
- கடுகு - 2 தேக்கரண்டி
- உளுந்து -2 தேக்கரண்டி
- சமையல் கடலை பருப்பு - 50 mg
- நிலக்கடலை பருப்பு - 50 mg
- கறிவேற்பிலை - ஒரு கைப்பிடி அளவு
- மிளகாய் வற்றல் - 5 எண்ணிகை
- பெருங்காயத்தூள் - 2 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் -2 தேக்கரண்டி
- புளிக்கரைசல் - 250 mg
- உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வறுக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாணலியில் தனி
தனியே எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு இவற்றில் மிளகாய் வற்றலை தவிர அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடி செய்து கொள்ளவும் . பிறகு வறுத்த மிளகாய் வற்றலை ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும் .
தனியே எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு இவற்றில் மிளகாய் வற்றலை தவிர அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடி செய்து கொள்ளவும் . பிறகு வறுத்த மிளகாய் வற்றலை ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும் .
இப்போது தாளிக்க தேவையானவற்றை எடுத்து கொள்ளவும் . வாணலியில் எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும் கடுகு,உளுந்து, சமையல் கடலை பருப்பு, நிலக்கடலை பருப்பு ஆகியவற்றை பொன்னிறமாக பொறிய விடவும் .பிறகு கறிவேப்பிலையும் சேர்த்து வறுக்கவும் .பின்பு இவற்றில் பெருங்காயத்தூள் , மஞ்சள்தூள் சேர்த்து சற்று நேரம் வதக்கவும் இவற்றுடன் நம் அரைத்து வைத்துள்ள கலவையும் சேர்த்து வதக்கவும் (குறிப்பு : கருக விடாமல் வறுக்கவும்).
இவற்றுடன் புளிக்கரைசலை நன்கு வடிகட்டி சேர்க்கவும் . கரைசல் நன்கு கொதித்து வற்ற வேண்டும் . நன்கு கெட்டியாக வற்ற வேண்டும் . நாம் ஊற்றிய எண்ணெய் மேலெழுப்பி வரவேண்டும் அந்த அளவுக்கு வற்ற வேண்டும் .
இப்போது நமக்கு தேவையான புளித்தொக்கு ரெடி . தொக்கு நன்றாக ஆறியவுடன் , வடித்த ஆரிய சாதத்துடன் சேர்த்து கிளறி சிறிது நேரம் கழித்து பரிமாறவும் .
Comments
Post a Comment